/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டு மனை விற்பனையாளர் சங்க கூட்டம்
/
வீட்டு மனை விற்பனையாளர் சங்க கூட்டம்
ADDED : ஜூன் 08, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: இந்திய தேசிய ரியல் எஸ்டேட்ஸ், பில்டர்ஸ் மற்றும் லேண்ட் பிரமோட்டர்ஸ் சங்கம் எனப்படும் வீட்டுமனை விற்பனையாளர்கள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் குமார் தலைமையில், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
நமண்டி கண்ணன் முன்னிலை வகித்தார். கோனேரிக்குப்பம் சுரேஷ் வரவேற்றார். சங்க மாநில தலைவர் வி.என்.கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்.
இதில், புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவராக பெ.குமார், செயலராக வழக்கறிஞர் லோகேஷ், பொருளாளராக மகேந்திரன் உள்ளிட்ட 16 பேர் நிர்வாகக் குழுவினராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர் தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.