/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை மேலும் ஒருவருக்கு 'காப்பு'
/
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை மேலும் ஒருவருக்கு 'காப்பு'
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை மேலும் ஒருவருக்கு 'காப்பு'
முன்னாள் பெண் இன்ஸ்., கொலை மேலும் ஒருவருக்கு 'காப்பு'
ADDED : செப் 01, 2024 01:35 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் காலாண்டர் தெருவைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 62. இவர், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர், 30 ஆண்டுகளுக்கு முன், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார்.
கடந்த 21ம் தேதி, அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சிவகாஞ்சி போலீசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கஸ்துாரி சடலம் அழுகிய நிலையில் இருந்தது.'சடலத்தை மீட்ட சிவகாஞ்சி போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், பெண்ணின் தலையில் மட்டுமல்லாமல், உடலின் மேலும் சில இடங்களில் காயம் இருந்துள்ளன.
இதுகுறித்து, சிவகாஞ்சி போலீசார் சந்தேக மரணமாக பதிவு செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள், கஸ்துாரியின் மொபைல் அழைப்புகள் விபரம் சேகரித்ததில், காஞ்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு, 52. என்பவருடன் சேர்ந்து, கஸ்துாரியை, வளையாபதி, கொலை செய்தது தெரியவந்தது.
இரு தினங்களுக்கு முன்பு, வளையாபதியை கைது செய்து, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே கொலை வழக்கில், தொடர்புடைய பிரபு, 52. என்பவர், நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.