/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் மறியல்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் மறியல்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் மறியல்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் மறியல்
ADDED : ஏப் 20, 2024 12:24 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த வெண்பேடு ஊராட்சியை சேர்ந்தவர் வேலு, 64. அ.ம.மு.க., நிர்வாகி.
இவர், கடந்த 1986ம் ஆண்டிலிருந்து, தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். அதேபோல் அவரின் மனைவியும் இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து உள்ளார்.
நேற்று, இவர் ஓட்டளிக்க வந்தபோது, தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி, கோரிக்கை பதாகையை கழுத்தில் அணிந்தபடி, கூட்டணி கட்சியினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து வேலு கூறியதாவது:
நான் 1964ல் இருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். இந்த முறை என்னுடைய பெயர் எந்த அறிவிப்பும் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
பூத் சிலிப் மூன்று நாட்களுக்கு முன் கொடுத்திருந்தால் தெரிந்திருக்கும். அவ்வாறு ஏதும் கொடுக்கவில்லை.
நான், காலை 8:00 மணிக்கு வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, என் பெயரை தேடி பார்த்த போது, அது நீக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
அதனால், வி.ஏ.ஓ., விடம் 9:00 மணிக்கு முறைப்படி மனு அளித்து, என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. 12:00 மணி வரை நேரம் தருகிறேன். ஏன் விடுபட்டது என ஆராயவேண்டும். வாக்களிக்கும் உரிமை தர வேண்டும் என கூறினேன்.
இல்லையென்றால், 12:00 மணிக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டம் செய்வேன் என கூறினேன்.
அதன் பின், அதிகாரிகள் 2 ரூபாய் பணம் கட்டி சேலஞ்ச் ஓட்டளியுங்கள் என கூறினர். ஆனாலும், பின்னர் ஓட்டளிக்க என்னை அனுமதிக்கவில்லை.
அதிகாரிகளும் முறையான காரணங்கள் ஏதும் கூறவில்லை. என்னுடைய உரிமையை பறித்துவிட்டனர். எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

