/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களின் 600 ஓவியங்கள் கண்காட்சி
/
மாணவர்களின் 600 ஓவியங்கள் கண்காட்சி
ADDED : ஜூலை 22, 2024 01:04 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் தெருவில், ஓவிய ஆசிரியர் கீதா என்பவரிடம் பயிலும், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரின் ஓவிய கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது.
பல வகையான பொருட்களை கொண்டு, வண்ணங்களை கொண்டு வரையப்பட்ட 600 ஓவியங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
பச்சையப்பன் பள்ளி ஓவிய ஆசிரியர் சந்தானகுமார், குளோபல் பள்ளி முதல்வர் ஜூலியன் கெமிலியஸ், அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொய்யாமொழி ஆகியோர் நேற்று இக்கண்காட்சியில் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கினர்.
வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை இலவசமாக அனைவரும் பார்வையிடலாம்.