/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோடை சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
/
கோடை சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
ADDED : மே 29, 2024 06:30 AM
சென்னை : தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருநெல்வேலியில் இருந்து ஜூன் 6, 13, 20, 27ம் தேதிகளில் மாலை 6:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு எழும்பூர் வரும்
எழும்பூரில் இருந்து ஜூன் 7, 14, 21, 28ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7:10 மணிக்கு திருநெல்வேலி செல்லும்
நாகர்கோவிலில் இருந்து ஜூன் 2, 16, 30ம் தேதிகளில் இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:15 மணிக்கு எழும்பூர் வரும்
எழும்பூரில் இருந்து வரும் ஜூன் 3, 17, ஜூலை 1ம் தேதிகளில் மாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3;15 மணிக்கு நாகர்கோவிலுக்கு செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.