/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலீசாக நடித்து மூவரிடம் ரூ.3.53 லட்சம் சுருட்டல்
/
போலீசாக நடித்து மூவரிடம் ரூ.3.53 லட்சம் சுருட்டல்
ADDED : ஆக 12, 2024 03:23 AM
சென்னை : சென்னை, நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கிரிதர், 43; டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன விற்பனையாளர்.
ஜூலையில், இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், 'கிரிதர் பெயரில் ஈரான் நாட்டிற்கு தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், விலை உயர்ந்த மடிக்கணினி, மொபைல் போன் மற்றும் போதை பொருள் இருந்துள்ளன' என கூறியுள்ளார். பின், 'வீடியோ' அழைப்பில், பார்சலில் இருந்த பொருட்களை காண்பித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்து கைது செய்வதாக, மர்ம நபர் மிரட்டியுள்ளார். இந்நடவடிக்கையை தவிர்க்க, 'ஜி பே' வாயிலாக கிரிதரிடம் இருந்து, 2.28 லட்சம் ரூபாயை மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து கிரிதர், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
அதே பாணியில், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கிருஷ்ணராவ், 43, என்பவரிடம் 1 லட்சம் ரூபாய், ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது, 36, என்பவரிடம் 25,000 ரூபாயை, மர்ம நபர்கள் சுருட்டி உள்ளனர்.
மூவரிடமும், 3.53 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

