தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மரம் விழுந்து விவசாயி பலி

மரம் விழுந்து விவசாயி பலி

மரம் விழுந்து விவசாயி பலி


ADDED : மே 10, 2026 10:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 10:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, வெங்கல் அடுத்த மேலானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன், 59; விவசாயி. நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, அருகிலிருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியது.

இதில், தென்னை மரம் சாய்ந்து தனஞ்செழியன் மீது விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த தனஞ்செழியன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us