ADDED : ஜூலை 31, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெற்பயிர்களை சேதமாக்கும் காட்டு பன்றிகளை ஒழிக்கவும், 2006ம் ஆண்டு வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
இருளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, கலெக்டர் அலுவலகம் அருகே, பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சங்க நிர்வாகிகள் நேரு, சாரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர். காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.