/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒழையூரில் உடைந்த ஏரி மதகுகள் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
ஒழையூரில் உடைந்த ஏரி மதகுகள் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒழையூரில் உடைந்த ஏரி மதகுகள் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒழையூரில் உடைந்த ஏரி மதகுகள் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 30, 2024 11:24 PM

ஒழையூர்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள ஒழையூர் ஏரி, நீர்வள ஆதாரத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, ஒழையூர், மோட்டூர் என, கிராமங்களிலும், 150 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரியில் உள்ள இரு மதகுகளும் பழுதடைந்து, ஷட்டர் இல்லாமல் உடைந்த நிலையில் உள்ளது.
இதனால், ஆண்டுதோறும் பருவமழைக்கு ஏரி முழுமையாக நிரம்பினாலும், மதகு உடைந்த நிலையில் உள்ளதால், ஓட்டை வழியாக ஏரிநீர் வெளியேறி விடுகிறது. மேலும், கலங்கல் பகுதி செடி, கொடிகள் மண்டி துார்ந்த நிலையில் உள்ளதால், நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்து விட்டது.
இதனால், ஆண்டுதோறும் இரு போகம் பயிர் சாகுபடி செய்த விவசாயிகள், இரு ஆண்டுகளாக ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஒழையூர், மோட்டூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், ஒழையூர் ஏரியில் உடைந்த நிலையில் உள்ள இரு மதகுகளையும், செடி, கொடிகள் மண்டி துார்ந்த நிலையில் உள்ள கலங்கல் பகுதியையும் சீரமைக்க, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒழையூர், மோட்டூர் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.