/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2024 10:03 PM
காஞ்சிபுரம்,உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு, மலையாங்குளம் மற்றும் அதைச் சுற்றி உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த நெல்மணிகளை மூட்டைகளாக எடுத்து வந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர்.
தற்போது, அப்பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டு சொர்ணவாரி பட்டத்திற்கான நெற்பயிர் சாகுபடி செய்து சிலர் அறுவடையை துவக்கி உள்ளனர்.
ஆனால், இந்த கிராமத்தில் இன்னும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படாமல் உள்ளதால், சில விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்று நஷ்டம் அடைகின்றனர்.
மேலும், பலர், சொர்ணவாரி பட்டத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், மலையாங்குளம் கிராமத்தில் துவக்கப்படும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்த நெல்லை வீட்டிற்கு அருகே வெயிலில் உலர்த்தி பாதுகாத்து வருகின்றனர்.
எனவே, சொர்ணவாரி பட்டத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மலையாங்குளத்தில் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.