/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
/
வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
ADDED : மே 28, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,: காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மண்டல தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வேலுமணி முன்னிலை வகித்தார். இதில் மதுரையில் நடந்த 41வது மாநில மாநாட்டில் மாநில துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதுார் கோபால்,மாநில இணை செயலராக தேர்வு செய்யப்பட்ட உத்திரமேரூர் செல்வகுமார் ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், சங்கம் வளர்ச்சி குறித்தும், பல்வேறு இணை சங்கங்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.