/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
/
சாலையில் திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
சாலையில் திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
சாலையில் திரிந்த மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்
ADDED : ஆக 03, 2024 09:51 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், அதிக அளவில் விபத்துகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட வேண்டாம். தவறினால் மாடுகள் பிடித்து செல்லப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதை பொருட்படுத்தாமல், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் சுற்றி திரிந்த 2 மாடுகளை ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., பவானி தலைமையில் ஊழியர்கள் நேற்று பிடித்து சென்று, உரிமையாளர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், மாடுகளை இனிமேல் சாலையில் சுற்றித் திரிய விடமாட்டோம் என, உறுதிமொழி பெற்ற பின்னரே மாடுகளை விடுவித்தனர்.