தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ முதலுதவி பயிற்சி

முதலுதவி பயிற்சி

முதலுதவி பயிற்சி


ADDED : ஏப் 08, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நடந்த, பொதுமக்களுக்கான அடிப்படை முதலுதவி பயிற்சி நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமை வகித்தார்.

நடப்பாண்டு இறுதிக்குள் மாநில தலைவரின் கனவான 100 சதவீத இலக்கை அடைய திட்டம் வகுக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க இணை செயலர் டாக்டர் வெ.முத்துக்குமரன் வரவேற்றார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் கிளை அமைப்பான மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டாக்டர் மு.ராகுல் பாண்டியன், டாக்டர் கி.தீபிகா ஆகியோர் செயற்கை மார்பளவு மனித உடல்களை வைத்து அடிப்படை முதலுதவி பயிற்சி குறித்து செயல்விளக்கம் அளித்ததோடு, பொதுமக்களையும் செய்ய வைத்து சந்தேகங்களுக்கு விடை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரிய முன்னாள் தலைவரான 90 வயது மூதாட்டி சம்பாலக் ஷ்மி, நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கியான் சந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us