ADDED : செப் 07, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசப்பன், 51; மீனவர். வீட்டருகே உள்ள துலுக்காணத்தம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 2ம் தேதி பங்கேற்றார்.
அப்போது, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 28, என்பவர் நடனமாடியபடி, ரகளை செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட போது, பரத் ஆத்திரமடைந்து, தேசப்பனை தாக்கினார்.
தலையில் பலத்த காயமடைந்த தேசப்பன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், பரத்தை நேற்று கைது செய்தனர்.