ADDED : மே 19, 2026 03:10 PM

கொடி திப்பிலி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜீவ்காந்தி கூறியதாவது:
கொடி திப்பிலி சாகுபடி செய்துள்ளேன். இந்த திப்பிலி செடியானது, படரும் தன்மை உடையது. இதில், கிடைக்கும் திப்பிலி சேகரித்து உலர்த்திய பின் உணவு, டீ உள்ளிட்டவற்றுடன் நறுமணத்திற்கு சேர்த்து கொள்கிறேன்.
திப்பிலி கொடி சாகுபடி செய்வதன் மூலமாக, இருவித பயன்பாடுகள் உள்ளன. திப்பிலி சாகுபடி செய்யும் போது, திப்பிலியாக அறுவடை செய்கிறோம். இரண்டாவதாக, மரக்கன்றுகளுக்கு கீழே சாகுபடி செய்யும் போது நிலப் போர்வையாகவும் பயன்படுகிறது.
குறிப்பாக, திப்பிலி சாகுபடி செய்யும் போது, தண்ணீர் தேங்குமிடம் மற்றும் நிழல் தரும் இடங்களில் நடவு செய்தால், திப்பிலி கொடி படரும் தன்மை அதிகமாக இருக்கும். திப்பிலி மகசூல் அதிகமாக இருக்கும்.
நாட்டு மருந்துக் கடைகளில், திப்பிலி சந்தைபடுத்தும் திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
– எம்.ராஜீவ்காந்தி,
89402 22567.
