/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளம்பாக்கத்தில் தடுப்புகளின்றி தரைப்பாலம்
/
பள்ளம்பாக்கத்தில் தடுப்புகளின்றி தரைப்பாலம்
ADDED : மே 26, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டலம்:கொட்டவாக்கம் கிராமத்தில் இருந்து, தண்டலம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில், 3 கி.மீ., துாரத்திற்கு ஒன்றிய சாலை உள்ளது.
இந்த சாலையின் குறுக்கே, கொட்டவாக்கம் ஏரிக்கு செல்லும், நீர் வரத்து கால்வாய் மீது தரைப்பாலம் செல்கிறது.
இந்த சாலை இருபுறமும், தடுப்புக் கம்பிகள் இல்லை. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், தரைப்பாலத்தில் விபத்தில் சிக்க நேரிடுகிறது என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
எனவே, கொட்டவாக்கம் - -தண்டலம் இடையே செல்லும் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.