/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உடைந்து விழுந்த காவலர் குடியிருப்பு கூரை அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
/
உடைந்து விழுந்த காவலர் குடியிருப்பு கூரை அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
உடைந்து விழுந்த காவலர் குடியிருப்பு கூரை அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
உடைந்து விழுந்த காவலர் குடியிருப்பு கூரை அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு
ADDED : ஏப் 03, 2024 12:50 AM

சென்னை:ஆலந்துார், எம்.கே.என்.சாலையில் காவலர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருப்பின், 15வது பிளாக் மூன்றாவது மாடி படிக்கட்டின் சிமென்ட் கூரை, 35 அடி உயரத்தில் இருந்து நேற்று மதியம் திடீரென உடைந்து விழுந்தது.
இதனால் ஏற்பட்ட பெருத்த சத்தத்தால், குடியிருப்பில் இருந்து அனைவரும் பதறியடித்து வெளியே வந்தனர்.
கட்டடத்தின் நிலை
சம்பவம் நடந்த பகுதியில், ஏராளமான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும். நல்லவேளையாக, தேர்வுகள் நடப்பதாலும், வெயில் காரணமாகவும் மதியம் அங்கு எவரும் இல்லை. இதனால், உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று நொறுங்கியது.
மேற்கூரையில் விரிசல் விட்ட இடத்தில் செடிகள் வளர்ந்திருந்தன. அதனால், விரிசல் அதிகரித்து கூரை சரிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மவுன்ட் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு, 23.52 கோடி ரூபாய் செலவில், 20 பிளாக்கில், 393 வீடுகள் கட்டப்பட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த குடியிருப்பை, 2010 ஜூன் மாதம் திறந்து வைத்தார்.
ஆனால், வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், குடியிருப்பின் முகப்பில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
குற்றச்சாட்டு
அதுமட்டுமல்லாமல், கடந்த 13 ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை. குடியிருப்பின் வெளிப்புற பகுதியில் ஆங்காங்கே விரிசல் காணப்படுகின்றன.
அதேபோல, மழை நீர் முறையாக வெளியேற வழிவகை செய்யப்படாததால், மழைக்காலத்தில் மேல் மாடியில் இருந்து மழைநீர் முறையாக வெளியேற வழி செய்யப்படவில்லை.
இதனால், மேல் தளத்தில் பல வீடுகளில் கசிவுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டும் உள்ளது.
போலீசாரின் குடும்பத்தினர் கூறுகையில், ''காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து பிளாக்குகளிலும், மாடியின் சுற்றுச்சுவர்கள், கூரைகளில் செடிகள் வளர்ந்து சேதமடைந்துள்ளன. குடிசையில் வாழ்வதை விட மோசமாக வாழ்ந்து வருகிறோம்.
''புகார் தெரிவித்தால், அதிகாரிகள் வருவார்கள், பார்ப்பார்கள், செல்வார்கள் தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்த குடியிருப்பை முழுமையாக புனரமைக்க வேண்டும்,'' என்றார்.

