/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் சிக்கினர்
/
வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் சிக்கினர்
ADDED : செப் 02, 2024 10:27 PM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, நெமிலி செல்வமந்தை காலனி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன், 20; ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில்'டெலிவரி பாய்' வேலை செய்து வந்தார்.
இவர், கடந்த 27ம் தேதி, வீட்டிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் சென்றார். ராமாபுரம் தைலம் தோப்பு அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், தமிழரசனை மடக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 1,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இது குறித்த புகாரின் படி, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், 18, நாகராஜன், 18, மற்றும்17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட நான்கு பேரை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார், நேற்று கைது செய்தனர்.