/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மோசடியாக 1 ஏக்கர் நிலம் பதிவு பா.ம.க., நகர செயலருக்கு சிறை
/
மோசடியாக 1 ஏக்கர் நிலம் பதிவு பா.ம.க., நகர செயலருக்கு சிறை
மோசடியாக 1 ஏக்கர் நிலம் பதிவு பா.ம.க., நகர செயலருக்கு சிறை
மோசடியாக 1 ஏக்கர் நிலம் பதிவு பா.ம.க., நகர செயலருக்கு சிறை
ADDED : மே 13, 2024 05:52 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 59. இவர், தன் உறவினருக்கு சொந்தமான நிலங்களை அனுபவித்தும், பராமரித்தும் வருகிறார்.
இந்நிலையில், இந்த நிலத்தில் ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலத்தை போலியாக, பத்திரப்பதிவு செய்தது ஏழுமலைக்கு தெரிந்தது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.
இதுகுறித்து ஏழுமலை, 2023 மார்ச் 27 ல் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. யிடம் புகார் அளித்தார். விசாரணையில் கும்மிடிப்பூண்டி பா.ம.க., நகர செயலர் இளஞ்செல்வம் என்பவர், உறவினர்கள் துணையோடு, நிலத்தில் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து 2024 ஜனவரியில் வழக்கு பதிந்த, திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசார், இரு தினங்களுக்கு முன் இளஞ்செல்வத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இளஞ்செல்வம் மனைவி ஜோதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பா.ம.க., கவுன்சிலராக உள்ளார்.