sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்

/

பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்

பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்

பெரும்பாக்கம் போலீசார் சார்பில் இலவச கராத்தே பயிற்சி துவக்கம்


ADDED : ஜூன் 10, 2024 04:53 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பெரும்பாக்கம் காவல் நிலையம் சார்பில், மாணவ - மாணவியருக்கு கராத்தே கற்றுக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதல் நாள் பயிற்சி, பெரும்பாக்கம் லைட் ஹவுஸ் குடியிருப்பு வளாகத்தில், நேற்று நடந்தது.

இதில், 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், 75 பேர் பங்கேற்றனர். பெரும்பாலானோர் மாணவியர். கராத்தே பயிற்சியை தலைமைக் காவலர் காமராஜ், கற்றுக் கொடுத்தார்.

போலீஸ்காரர் காமராஜ் கூறியதாவது:

தற்காப்பு கலையாகவும், போட்டியில் பங்கேற்கும் விதமாகவும் கராத்தே உள்ளதால், மாணவ - மாணவியர் ஆர்வமாக பங்கேற்றனர். மாணவியர் பங்கேற்பு அதிகமாக இருப்பது வரவேற்கத்தக்கது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரண்டு மணி நேரம் இலவசமாக பயிற்சி வழங்குகிறோம்.

மூன்று மாதம் முறையாக வந்தால், அடிப்படை கராத்தே கற்றுக் கொள்ள முடியும். மாணவ - மாணவியர் ஆர்வத்தை பொறுத்து, அவர்கள் விரும்பும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us