/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி உழவர் சந்தைகளில் விநாயகர் சிலைகள் விற்பனை
/
காஞ்சி உழவர் சந்தைகளில் விநாயகர் சிலைகள் விற்பனை
ADDED : செப் 05, 2024 11:19 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் ஜீவராணி தெரிவித்துள்ளதாவது:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை, குன்றத்துார், காஞ்சிபுரம் ஆகிய உழவர் சந்தைகளில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் 15 வகையான பழங்கள் உள்ளிட்ட அனைத்தும், உழவர் சந்தைகளில் கிடைக்கும்.
விநாயகர் சிலைகள் அளவுக்கேற்ப 75 - 150 ரூபாய் வரையும், பழ வகைகள் 100 - 200 வரையும், பொரி கடலை தொகுப்புகள் 50 - 100 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதை கண்காணிக்க மாவட்ட அளவில் வேளாண்மை அலுவலர் தீபா மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர் சந்தை அலுலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் உழவர் சந்தைகளில் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.