/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாயிற்கதவு இல்லாத கண்டிவாக்கம் துவக்கப்பள்ளி
/
வாயிற்கதவு இல்லாத கண்டிவாக்கம் துவக்கப்பள்ளி
ADDED : ஜூன் 15, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துளசாபுரம்:மதுரமங்கலம் அடுத்த, துளசாபுரம் ஊராட்சியில், கண்டிவாக்கம் துணை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் உள்ளது.
இந்த பள்ளிக்கு, இரண்டு வகுப்பறை கூடுதல் கட்டடத்திற்கு, பள்ளி சுற்றுச்சுவர் கேட் அகற்றப்பட்டது. அதன்பின், இரும்பிலான கேட் பொருத்தவில்லை. இதனால், பள்ளி வளாகத்திற்குள் ஆடு, மாடுகள் எளிதாக நுழைகின்றன. மாணவ- - மாணவியருக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, கண்டிவாக்கம் துவக்கப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் வாயிற்கதவு அமைக்க வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்து உள்ளது.