/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் மோதி சிறுமி பலி; மேலச்சேரியில் சோகம்
/
பைக் மோதி சிறுமி பலி; மேலச்சேரியில் சோகம்
ADDED : மே 13, 2024 03:34 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு, 41, என்பவரின் மகள் வர்ஷா, 8. நேற்று முன்தினம், வீட்டின் எதிரே உள்ள பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்க சென்றார்.
சிக்கன் ரைஸ் வாங்கி கொண்டு சாலையை கடக்க முயன்ற வர்ஷா மீது, அந்த வழியாக வேகமாக வந்த 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனம் சிறுமி மீது மோதியது.
இந்த விபத்தில், வர்ஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த காஞ்சிபுரம் மாவட்டம், உள்ளாவூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 21, என்பவருக்கு, வலது கையில் முறிவு ஏற்பட்டது.
இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, வர்ஷா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.