/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி இரட்டை மண்டபம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல்
/
காஞ்சி இரட்டை மண்டபம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல்
காஞ்சி இரட்டை மண்டபம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல்
காஞ்சி இரட்டை மண்டபம் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு பசுமை பந்தல்
ADDED : மே 07, 2024 04:34 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக 42 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை நிலவி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலில் சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களில், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்தில் சிக்னல் சந்திப்புகளில், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சிக்னல்களில், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காஞ்சிபுரத்தில் உள்ள சிக்னல்களில் பசுமை நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், இரட்டை மண்டபம் சிக்னலில் பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிக்னல்களைவிட, இரட்டை மண்டபம் சிக்னலில் மட்டுமே வாகன ஓட்டிகள் 120 நொடிகள் நிற்க வேண்டியுள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் உத்தரவின்படி, டி.எஸ்.பி., முரளி ஆலோசனைப்படி, போக்குவரத்து போலீசார் சார்பில், இரட்டை மண்டபம் சிக்னலில், நான்கு பக்கங்களிலும், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.