/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொசு வலையில் படர்ந்த தீ குன்றத்துார் தம்பதி படுகாயம்
/
கொசு வலையில் படர்ந்த தீ குன்றத்துார் தம்பதி படுகாயம்
கொசு வலையில் படர்ந்த தீ குன்றத்துார் தம்பதி படுகாயம்
கொசு வலையில் படர்ந்த தீ குன்றத்துார் தம்பதி படுகாயம்
ADDED : செப் 14, 2024 07:47 PM
குன்றத்துார்:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பஷீர் ஷேக், 32; வேன் ஓட்டுனர். இவரது மனைவி ரஜியா சுல்தானா, 28. இவர்கள், இரு குழந்தைகளுடன், குன்றத்துார் அருகே பழந்தண்டலத்தில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, கொசுவர்த்தி ஏற்றி வைத்து, கொசுவலை விரித்து அதனுள் அனைவரும் துாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, கொசுவர்த்தி தீ பட்டு, கொசு வலை எரிந்துள்ளது.
இதில், ரஜியா சுல்தானாவின் உடையிலும் தீப்பிடித்துள்ளது. அவர் பலத்த காயமடைந்தார். தீயை அணைக்கும் முயற்சியின்போது பஷீர் ஷேக்கிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகள் படுத்திருந்த பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், குழந்தைகள் தப்பினர். பஷீர் ஷேக் தம்பதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.