/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒய்யாரமாக உலாவும் கால்நடைகள் வாலாஜாபாத் சாலையில் கடும் நெரிசல்
/
ஒய்யாரமாக உலாவும் கால்நடைகள் வாலாஜாபாத் சாலையில் கடும் நெரிசல்
ஒய்யாரமாக உலாவும் கால்நடைகள் வாலாஜாபாத் சாலையில் கடும் நெரிசல்
ஒய்யாரமாக உலாவும் கால்நடைகள் வாலாஜாபாத் சாலையில் கடும் நெரிசல்
ADDED : ஜூலை 06, 2024 12:15 AM

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. வாலாஜாபாதை சுற்றி கிராம பகுதிகள் என்பதால், இப்பகுதியினர் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, வாலாஜாபாத் போதக்காரர் தெரு, முனிசிப் நாராயணசாமி தெரு, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போதும், வீடு திரும்பும் போதும் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடந்து தான் செல்லும் நிலை உள்ளது.
அச்சமயங்களில், சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனினும், கால்நடை பராமரிப்போரில் சிலர், கால்நடைகளை எந்நேரமும் நெடுஞ்சாலையில் விட்டு விடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
வாலாஜாபாத் சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், கனரக வாகனங்களும், ஒரகடம் உள்ளிட்ட பகுதி தொழிற்சாலைகளுக்கு வேன், பேருந்து போன்றவைகளும் அதிகளவில் சென்று வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில், எந்த நேரமும் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. சாலையில் நடமாடும் மற்றும் ஓய்வெடுக்கும் கால்நடைகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு கூறினர்.