/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் வாகன சோதனைச்சாவடிகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதி தேவை
/
பரந்துார் வாகன சோதனைச்சாவடிகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதி தேவை
பரந்துார் வாகன சோதனைச்சாவடிகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதி தேவை
பரந்துார் வாகன சோதனைச்சாவடிகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதி தேவை
ADDED : ஏப் 08, 2024 11:24 PM
காஞ்சிபுரம் : பரந்துார் விமான நிலையத்திற்கு, நிலம் கொடுக்கும் விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் ஆகியோரை கட்டுப்படுத்துவதற்கு, வளத்துார் கூட்டு சாலை, பரந்துார், மேலேரி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம் ஆகிய பகுதிகளில், தற்காலிக சோதனைச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சோதனைச்சாவடிகளுக்கும், நான்கு காவலர்கள் என, மூன்று ஷிப்டுகளில் கண்காணிக்கும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, சிறிய அளவில் மின் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு வாகனத்தை முழுமையாக பரிசோதனை செய்வதற்குரிய வெளிச்சம் கூட இல்லை என, காவலர் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
ஆகையால், வளத்துார் கூட்டு சாலை, பரந்துார் கூட்டு சாலை, கண்ணன்தாங்கல் ஆகிய பிரதான சோதனைச்சாவடிகளில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.