/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக வருவாய் தரும் அலங்கார கோழி வளர்ப்பு
/
அதிக வருவாய் தரும் அலங்கார கோழி வளர்ப்பு
ADDED : ஜூலை 31, 2024 02:08 AM

அலங்கார கோழி வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, ஆடு, மாடு, வாத்து, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இனப்பெருக்கம் மற்றும் இறைச்சிக்கு வளர்க்கப்படும் கால்நடைகளும் உள்ளன. இதில், அலங்கார கோழி வளர்ப்பு தொழில் ஒன்றாகும்.
சில்கி, பிரம்மா, லெக்ஹாரன், பிராய்லர் ஆகிய அலங்கார கோழி இனங்கள் உள்ளன. அனைத்து வகை கோழிகளும், இனப்பெருக்கம் மற்றும் இறைச்சிக்கு உபயோகப்படுத்தலாம்.
அலங்கார கோழி இனங்களை பொறுத்தவரையில், இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால், கோழி வளர்ப்பில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். உதாரணமாக, அலங்கார கோழி இனங்களை இறைச்சிக்கு விற்பனை செய்யும் போது, அதிகபட்சமாக கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்.
அதே அலங்கார கோழிகளை இனப்பெருக்கத்திற்கு விற்பனை செய்யும் போது, ஜோடி 2,000 ரூபாய் வரை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: -முனைவர்
கே.பிரேமவல்லி,97907 53594