/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
/
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
ADDED : மே 29, 2024 07:21 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, செங்காடு கிராமம், மாதம்மா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 34. இவரது மனைவி அமலா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார்.
கூலித்தொழில் செய்து வந்த பாலாஜிக்கு, அதிகப்படியான மதுப்பழக்கம் இருந்ததால், கணவர், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், அமலா, மூன்று மாதங்களாக, கணவரை பிரிந்து, குழந்தையுடன் திருவள்ளூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், மனைவி மற்றும் குழந்தையை பிரிந்த சோகத்தில் இருந்து வந்த பாலாஜி, மன விரக்தியில் நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின்படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.