/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
* படம் மட்டும் நெடுஞ்சாலையில் மணல் குவியல் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : பிப் 22, 2024 11:20 PM

இருங்காட்டுக்கோட்டை, சென்னை-- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் பூந்தமல்லி அருகே, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் சாலையோரம் மணல் குவியல், கருங்கற்கள் உள்ளன. இதனால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் ஏற்கனவே அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. இதனால், இந்த சாலையில் பயணிக்கவே அச்சமாக உள்ளது.
இந்நிலையில், இந்த சாலையோரம் உள்ள மணல் குவியல் அள்ளினால் புதிய வீடு கட்டிவிடலாம் அந்த அளவுக்கு மணல் குவிந்து காணப்படுகிறது. வாகனங்கள் இந்த மணலில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் மணல் குவியலை அகற்ற வேண்டும். என தெரிவித்தனர்.