/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வைப்பூரில் அதிக மின்னழுத்தத்தால் சாலையில் அறுந்து விழுந்த மின்ஒயர்
/
வைப்பூரில் அதிக மின்னழுத்தத்தால் சாலையில் அறுந்து விழுந்த மின்ஒயர்
வைப்பூரில் அதிக மின்னழுத்தத்தால் சாலையில் அறுந்து விழுந்த மின்ஒயர்
வைப்பூரில் அதிக மின்னழுத்தத்தால் சாலையில் அறுந்து விழுந்த மின்ஒயர்
ADDED : ஜூலை 23, 2024 11:31 PM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு ஒரகடம் மின்வாரிய அலுவலகம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, இங்குள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் வழக்கத்தை விட அதிகமாக மின்தேவை ஏற்படும் போது, அதிக மின்னழுத்தம் காரணமாக, இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வைப்பூர் பிரதான சாலையில் செல்லும் மின்ஒயரில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், திடீரென தீப்பொறி ஏற்பட்டு, மின்ஒயர் அறுந்து சாலையில் விழுந்தது.
இதை கண்ட, அப்பகுதியினர், அலறியடித்து ஓடினர். மின்ஒயர் அறுந்து விழுந்தபோது, வாகனங்கள் எதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஒரகடம் மின்வாரிய ஊழியர்கள், சாலையில் அறுந்து விழுந்த மின் ஒயரை சரி செய்தனர்.