/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரம்மானந்தர் சுகாதார மையம் பழவேரியில் துவக்கிவைப்பு
/
பிரம்மானந்தர் சுகாதார மையம் பழவேரியில் துவக்கிவைப்பு
பிரம்மானந்தர் சுகாதார மையம் பழவேரியில் துவக்கிவைப்பு
பிரம்மானந்தர் சுகாதார மையம் பழவேரியில் துவக்கிவைப்பு
ADDED : மே 11, 2024 12:45 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் ராமகிருஷ்ண மிஷன் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு மூலம் சுற்றுவட்டார கிராமங்களில், மருத்துவ முகாம் உள்ளிட்ட சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அட்சய திருதியையொட்டி, சுவாமி பிரம்மானந்தர் சுகாதார மையம் பழவேரியில் துவங்கப்பட்டது. ராமகிருஷ்ண மிஷன் செயலர் ஆத்மப்ரியானந்தர் சுகாதார மையத்தை துவக்கி வைத்தார்.
பத்மஸ்ரீ மருத்துவர் சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இப்பகுதி ராமகிருஷ்ண மிஷன் மூலம் திருமுக்கூடல், பினாயூர், பழவேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், நடமாடும் சுகாதார சேவை மற்றும் கிராம வளர்ச்சிக்கான உதவிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், வேத பிரயாணம் மற்றும் திவ்ய பிரபந்தத்தில் துவங்கி, திருப்புகழ் பாடி நிறைவு பெற்றது.