/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் அன்னாத்துாரில் துவக்கம்
/
நெல் கொள்முதல் நிலையம் அன்னாத்துாரில் துவக்கம்
ADDED : செப் 09, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்துாரைச் சுற்றி, ஆலப்பாக்கம், சித்தனக்காவூர், தண்டரை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்திற்கு சாகுபடி செய்த நெற்பயிரை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
தங்கள் நிலங்களில் அறுவடையான நெல்லை, அன்னாத்துாரில் குவித்து வைத்து அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, நேற்று, அன்னாத்துாரில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் துவக்கி வைத்தார்.
சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.