/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய்களில் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவது அதிகரிப்பு மாநகராட்சியில் பறிமுதல் நடவடிக்கை தேவை

ADDED : ஏப் 26, 2024 11:16 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 32,600 வீடுகளில், குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், 89 லிட்டர் குடிநீர், மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக தினமும் வழங்கப்பட்டு வருகிறது.
பாலாற்று படுகை
ஓரிக்கை மற்றும் திருப்பாற்கடம் ஆகிய இடங்களில் உள்ள பாலாற்று படுகையில் இருந்து, குடிநீர் கொண்டு வரப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
அவ்வாறு வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் குழாய்களில், மோட்டார் பொருத்தி, பலரும் முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை, தினமும் உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் குழாய்களில் எந்தெந்த வீடுகளில் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது என, வீடுதோறும் ஆய்வு நடத்த வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டிய தேவை, கோடை காலமான தற்போது ஏற்பட்டு உள்ளது.
சட்டவிரோத வேலை
முறைகேடான குடிநீர் இணைப்பு, மோட்டார் பொருத்துவது போன்ற சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, மோட்டார்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் சட்டவிரோதமாக பயன்படுத்தும் மோட்டார்களை பறிமுதல் செய்ததாக தெரியவில்லை. மாநகராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் சூழலில், சட்டவிரோதமான மோட்டார்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.