/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெயிலுக்கு கருகும் மரக்கன்றுகள் தண்ணீர் ஊற்ற வலியுறுத்தல்
/
வெயிலுக்கு கருகும் மரக்கன்றுகள் தண்ணீர் ஊற்ற வலியுறுத்தல்
வெயிலுக்கு கருகும் மரக்கன்றுகள் தண்ணீர் ஊற்ற வலியுறுத்தல்
வெயிலுக்கு கருகும் மரக்கன்றுகள் தண்ணீர் ஊற்ற வலியுறுத்தல்
ADDED : மே 11, 2024 11:25 PM

கீழ்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் இருந்து, பெரும்பாக்கம் செல்லும் சாலையோரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், கடந்த ஆண்டு சாலையோரம் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளிடமிருந்து, மரக்கன்றுகளை பாதுகாக்க, தடுப்பும் அமைக்கப்பட்டது.
இம்மரங்கள் வேரூன்றி செழித்து வளர்ந்து வந்தன. இந்நிலையில், கோடைக் காலம் துவங்கியதில் இருந்தே காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தண்ணீரின்றி மரக்கன்றுகளின் இலைகள் உதிர்ந்து கருகி வருகின்றன.
செழித்து வளர்ந்த மரக்கன்றுகள், கோடை வெயிலால் பட்டுப்போகும் என்பதால், பசுமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, முறையாக தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பாதுகாக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.