/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொன்னேரிக்கரை சாலையோரம் தடுப்பு நீட்டிக்க வலியுறுத்தல்
/
பொன்னேரிக்கரை சாலையோரம் தடுப்பு நீட்டிக்க வலியுறுத்தல்
பொன்னேரிக்கரை சாலையோரம் தடுப்பு நீட்டிக்க வலியுறுத்தல்
பொன்னேரிக்கரை சாலையோரம் தடுப்பு நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 21, 2024 02:05 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இருவழி சாலை 1,600 மீட்டர் நீளமுடையது.
காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், பொன்னேரிக்கரை சாலையின் இருபக்கமும் பள்ளம் உள்ள பகுதியில் சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கிழக்கு பக்கம் சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 3வது கி.மீ., எல்லை கல்லில் இருந்து, 35 மீட்டர் நீளத்திற்கு மேல் சாலை தடுப்பு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விடுபட்ட இடத்திற்கு சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.