/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை வளைவில் வேகத்தடை ஏற்படுத்த வலியுறுத்தல்
/
சாலை வளைவில் வேகத்தடை ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : மார் 25, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவாம்பயிர் கிராமம். புல்லம்பாக்கம், வயலக்காவூர், நெய்யாடுவாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர், காவாம்பயிர் சாலை வழியாக வெங்கச்சேரி சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து, உத்திரமேரூர், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், காவாம்பயிர் கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே அபாயகரமான சாலை வளைவு உள்ளது. இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
எனவே, இச்சாலையின் வளைவு பகுதியில் வேகத்தடை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

