/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆறு பால தடுப்புச்சுவரில் ஒளிபிரதிபலிப்பான் அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஏப் 18, 2024 09:53 PM

கீழம்பி:காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, வெங்கடாபுரம், குண்டுகுளம், கீழ்கதிர்பூர் வழியாக கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது.
உத்திரமேரூர், வந்தவாசி பகுதியில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் செவிலிமேடு புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
இச்சாலையில், கீழம்பி -- கீழ்கதிர்பூர் இடையே வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் பாலம் உள்ளது. இப்பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்கவில்லை.
இதனால், இரவு நேரத்தில் பாலம் அமைந்துள்ள பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் சுவரில்மோதி விபத்தில் சிக்கும் சூழல் இருந்தது.
எனவே, ஓரிக்கை பாலாறு பாலம் மற்றும் பொன்னேரிக்கரை மீடியனில் பொருத்தப்பட்டுள்ள, இரவில் ஒளிரும், ஒளிபிரதிபலிப்பானை வேகவதி ஆற்று பாலத்தின் தடுப்புச்சுவரிலும் பொருத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.