/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான குளக்கரை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான குளக்கரை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 28, 2024 10:59 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையை சுற்றிலும் 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது.
சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து, மின் நகர், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சின்ன வேப்பங்குளக்கரை சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அரசு உயர்நிலைப் பள்ளி அருகில், சின்ன வேப்பங்குளக்கரை ஒட்டியுள்ள பகுதியில் சிமென்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டு, சாலை உடைந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த பழைய சிமென்ட் சாலையை அகற்றிவிட்டு, புதிதாக சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.