/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சகதியான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
/
சகதியான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, எஸ்.எஸ்.கே., நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் உள்ள மும்முனை சாலை சந்திப்பில், சாலை சேதமடைந்துள்ளதால், மழைநீர் சகதியாக மாறியுள்ளது.
வாகன போக்குவரத்து நிறைந்தஇச்சாலை வளைவு பகுதியில்,தேங்கியுள்ள சகதி நீரால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, எஸ்.எஸ்.கே., நகரில், சாலை சேதமடைந்த பகுதியை பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.