/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேனலுார் சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
மேனலுார் சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மேனலுார் சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மேனலுார் சாலை விரிவாக்க பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 07, 2024 11:13 PM

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த, வேடபாளையத்தில் இருந்து, காட்டுப்பாக்கம் வழியாக, மேனலுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, கல்யாணமேடு, மேனாலுார், அரசாணிமங்கலம், மேட்டூர், பூந்தண்டலம், சோழனுார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலை, அகலம் குறைவாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்பட்டு வந்தது.
இதனால், இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இச்சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, வேடபாளையம் --- மேனாலூர் சாலை அகலப்படுத்தும் பணியாக முதற்கட்டமாக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது.
அடுத்தகட்ட பணி துவக்காமல், ஒரு மாதமாக சாலை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும், விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, காட்டுப்பாக்கம் - மேனலுார் சாலை விரிவாக்கம் செய்யும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.