/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 11:33 PM

ஒழையூர்:வாலாஜாபாத் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.
இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், பிள்ளையார் கோவில் தெருவிற்கு புதிதாக சாலை அமைக்க, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பரப்பி விடப்பட்டது.
இருப்பினும் அடுத்த கட்ட பணியை துவக்காமல், மூன்று மாதமாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.
எனவே, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, ஒழையூர் பிள்ளையார் கோவில் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒழையூரில் சாலை பணி கிடப்பில் போடப்பட்டது குறித்து ஆய்வு செய்து, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.