/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புக்கத்துறை நெடுஞ்சாலையில் பாலம் ஏற்படுத்த வலியுறுத்தல்
/
புக்கத்துறை நெடுஞ்சாலையில் பாலம் ஏற்படுத்த வலியுறுத்தல்
புக்கத்துறை நெடுஞ்சாலையில் பாலம் ஏற்படுத்த வலியுறுத்தல்
புக்கத்துறை நெடுஞ்சாலையில் பாலம் ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2024 10:42 AM
உத்திரமேரூர்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்து புக்கத்துறை கூட்டுச்சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராமத்தினர் மற்றும் கருங்குழி, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து உத்திரமேரூர் சென்று வருகின்றனர்.
புக்கத்துறை கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பயணியர், தினசரி நெடுஞ்சாலை பகுதியை கடந்து வந்தடையும் நிலை உள்ளது.
இதனால், இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்றவை சாலையின் குறுக்கே கடக்கும்போது இப்பகுதியில் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே மேம்பாலம் அமைத்து விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.