/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செலவின கணக்குகளை பராமரிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
/
செலவின கணக்குகளை பராமரிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
செலவின கணக்குகளை பராமரிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
செலவின கணக்குகளை பராமரிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 31, 2024 12:44 AM

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தல் செலவினங்கள் கண்காணிப்பு மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா, செலவின பார்வையாளர் சந்தோஷ் ஷரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களின் முகவர்கள் பேசியதாவது:
தேர்தல் பிரசாரத்திற்கு, வேட்பாளர்களுக்கு ஐந்து வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரத்திற்கு செல்லும் வழியில், பொதுமக்கள் வாகனங்களும் வருகின்றன.
தேர்தல் பணியில் ஈடுபடும் வீடியோ கிராபர்கள், வேட்பாளர் அனுமதி பெற்ற வாகனங்களுடன், பொதுமக்கள் வாகனங்களையும் பதிவு செய்கின்றனர்.
இந்த வாகனங்களுக்கும் தேர்தல் செலவு கணக்கு காட்டுகின்றனர். இதை தவிர்க்க, அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டும் செலவின கணக்கில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
அதற்கு, தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் வாகனங்கள் பயன்படுத்துவது குறித்து, வீடியோ கிராபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து, உதவி தேர்தல் அலுவலரிடம் முறையிடலாம் என, தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆலோசனை கூறினார்.
கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்:
l லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய, தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது
l வங்கி கணக்கு வேட்பாளரின் பெயரிலோ, வேட்பாளர் மற்றும் அவரது முகவர் ஆகியோர் கூட்டாகவோ ஆரம்பிக்கலாம்
l தேர்தலின் போது, அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகள், வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும்
l வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் செலவின முகவரால், தினமும் வரவு மற்றும் செலவின கணக்குகள், ஆவணங்களுடன் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வின் போது, கணக்கு பதிவேடுகள் காண்பிக்கப்பட வேண்டும்
l தேர்தல் செலவுக்காக பணம் பெறும் நன்கொடைக்கான நபர், நிறுவனங்களின் பெயர்கள், அவர்களின் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை கண்டிப்பாக பராமரித்து வர வேண்டும். அவற்றை, கணக்கு ஆய்வின் போது ஒப்படைக்க வேண்டும்.
l வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரும் நட்சத்திர பேச்சாளர், கட்சி தலைவர்களின் பயணச் செலவு நீங்கலாக, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கான முழுச்செலவினமும், வேட்பாளர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

