/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்வதேச ஓபன் செஸ் போட்டி சென்னையில் இன்று துவக்கம்
/
சர்வதேச ஓபன் செஸ் போட்டி சென்னையில் இன்று துவக்கம்
சர்வதேச ஓபன் செஸ் போட்டி சென்னையில் இன்று துவக்கம்
சர்வதேச ஓபன் செஸ் போட்டி சென்னையில் இன்று துவக்கம்
ADDED : மே 22, 2024 07:19 AM
சென்னை : சென்னையில், சர்வதேச 'பிடே ரேட்டிங் ஓபன் செஸ்' போட்டி இன்று துவங்குகிறது.
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு, இந்திய சதுரங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், அனந்தி செஸ் அகாடமி மற்றும் வியூகம் செஸ் அகாடமி இணைந்து நடத்தும், சர்வதேச ஓபன் பிடே ரேட்டிங் செஸ் போட்டி, ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள ஜேப்பியார் பல்கலை அரங்கில், இன்று துவங்குகிறது.
நாடு முழுதும் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியானது 'ஓபன், ரேட்டிங், நான் ரேட்டிங்' மற்றும் 7 முதல் 15 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளின் கீழ் நடக்கிறது.
வரும் 26ம் தேதி, இறுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன. முதலிடம் பெறும் வீரர்களுக்கு 75,000 ரூபாய் பரிசுத் தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும்.
தவிர, 7 முதல் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் சிறப்பாக செயல்படும் செங்கல்பட்டு மாவட்ட வீரர்களுக்கு, கோப்பைகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு நுழைவுக் கட்டணம், தங்கும் இடம், உணவு வசதி இலவசம்.
ஜேப்பியார் பல்கலை வேந்தர் ரெஜினா மற்றும் ஜேப்பியார் கல்விக் குழும இயக்குனர் மார்கரெட் ரெஜினா ஆகியோர், இன்று காலை போட்டியை துவக்கி வைக்கின்றனர்.

