/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்வதேச தரத்தில் வசதிகள் மாமல்லையில் ஏற்பாடு
/
சர்வதேச தரத்தில் வசதிகள் மாமல்லையில் ஏற்பாடு
ADDED : செப் 09, 2024 05:08 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில்,பல்லவ மன்னர்கள், பாறை குன்றுகளில்உருவாக்கியுள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடைவரைகள் ஆகிய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன.
தொல்லியல் துறை, அவற்றை பாதுகாத்து பராமரிக்கிறது.உள்நாடு, சர்வதேசபயணியர், கண்டுமகிழ்கின்றனர்.
பாரம்பரிய சிற்ப வளாகங்களில், பயணியருக்கு அவசியமான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.
சுத்தகரிப்பு குடிநீர், நவீன கழிப்பறை, கற்களில் இருக்கைகள், மின் விளக்குகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகளை, தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் ஏற்படுத்த,தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
இத்தகைய வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக, அத்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜான்விஜ் சர்மா, கடந்த ஆக., 28ம் தேதி, சிற்ப வளாகங்களில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நேற்று டைரக்டர் ஜெனரல் யதுபிர் சிங் ராவத், சென்னை வட்டகண்காணிப்பாளர்காளிமுத்து, மாமல்ல புரம் பராமரிப்புஅலுவலர் ஸ்ரீதர்ஆகியோருடன்,சிற்ப வளாகங்களைபார்வையிட்டார்.
அப்போது, சிற்ப வளாகங்களில் பயணியர் குவிவதை பார்வையிட்ட அவர், சர்வதேச தரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து, துறைஅலுவலர்களுடன்ஆலோசித்தார்.