ADDED : மே 08, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த மிட்னமல்லி, காந்தி பிரதான சாலை, 2வது தெருவைச் சேர்ந்தவர் சிவன் நாயர், 60. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், வீட்டில் சித்த மருத்துவம் பார்த்து வந்தார்.அவரது மனைவி பிரசன்ன குமாரி, 55; மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 28ம் தேதி இரவு, சிவன் நாயரும், பிரசன்ன குமாரியும், மர்மமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர்.
ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், வளசரவாக்கத்தில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ், 20, என்பவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.