/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்காட்சியில் பங்கேற்க மகளிர் குழுக்களுக்கு அழைப்பு
/
கண்காட்சியில் பங்கேற்க மகளிர் குழுக்களுக்கு அழைப்பு
கண்காட்சியில் பங்கேற்க மகளிர் குழுக்களுக்கு அழைப்பு
கண்காட்சியில் பங்கேற்க மகளிர் குழுக்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 28, 2024 08:20 PM
காஞ்சிபுரம்:சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாநில அளவிலான கண்காட்சி ஆண்டுதோறும் மூன்று முறை நடத்துகிறது.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, செப். 21 முதல், அக்.6 ம் தேதி வரை, கண்காட்சி நடக்க உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்கள் காட்சிபடுத்த உள்ளனர்.
இக்கண்காட்சியில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால், செப்.15ம் தேதிக்குள், https://exhibition.mathibazaar.com./login என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.