/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஜூன் 06, 2024 10:50 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்காக அடையாள அட்டை வழங்கும் முகாமில், 73 மாற்றுத்திறளாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தலைமை தாங்கினார். கண், காது, மூக்கு, தொண்டை, எலும்புமுறிவு, மனநலம் மருத்துவர்கள், முகாமில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தினர். இதில் தகுதி பெற்ற 73 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டன.