/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடுகளில் ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு
/
வீடுகளில் ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு
வீடுகளில் ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு
வீடுகளில் ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டு
ADDED : ஜூன் 08, 2024 11:12 PM
குன்றத்துார்: குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சி களில், ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தி, வீடுகளில் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதிகாரிகள் முறையாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குன்றத்துார் ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் அமைந்துள்ளன. சென்னை புறநகரில் குன்றத்துார் ஒன்றியம் உள்ளதால், இங்கு குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி தோறும் தெருக்குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுதவிர மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இணைப்புகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்வதே இல்லை. இதனால், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல வீடுகளில், டேங்க் அமைத்து ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் மீன் மோட்டாரை பொருத்தி, குடிநீரை உறிஞ்சி எடுத்து தேக்கி வைத்து பயன்படுத்துகின்றனர்.
ஒருவரை பார்த்து மற்றவர்களும் மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனர். இதனால், மேடான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சரியாக குடிநீர் கிடைப்பதில்லை.
சில ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்வதால், குடிநீர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்படவில்லை.
குழாய் இணைப்பில் மோட்டார் அமைத்து, குடிநீர் திருட்டு தொடர்ந்தால், வறட்சி காலங்களில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே, ஊராட்சி தோறும் ஜல்ஜீவன் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளில், அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு மின் மோட்டார் பயன்படுத்தி, குடிநீரை உறிஞ்சி திருடி எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.